Theme Check

பிப்.2 உலக சதுப்பு நில தினம்: இன்றைய காலக்கட்டத்தில் சதுப்பு நில பாதுகாப்பு அவசியம் ஏன்?

பிப்.2 உலக சதுப்பு நில தினம்: இன்றைய காலக்கட்டத்தில் சதுப்பு நில பாதுகாப்பு அவசியம் ஏன்?

பிப்.2 உலக சதுப்பு நில தினம்: இன்றைய காலக்கட்டத்தில் சதுப்பு நில பாதுகாப்பு அவசியம் ஏன்?
X

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ஆம் தேதி உலக சதுப்பு நில தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சதுப்பு நில நாள் என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்துகொள்ள கடைபிடிக்கும் நாளாகும். உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும் நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின.

பூமியின் மொத்த பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இதனை இரண்டு வகைகளாக பிரிக்க முடியும். அதாவது, இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன. அலையார்டிக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும் ஏரிகள், குளங்கள், நீர்த்தேங்கும் குவாரி பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

sathuppu nilam

1971ஆம் ஆண்டு காஸ்பியன் கடற் பகுதியில் உள்ள ஈரான் நாட்டில் ராம்சர் நகரில் 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சதுப்பு நிலங்களையும் நீர்நிலைகளையும் பாதுகாப்பது குறித்து முடிவு செய்து அது பற்றிய விவாத கூட்டத்தை நடத்தினர். அதே ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கி ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு உலக சதுப்பு நில நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றது.

169 நாடுகள் கையெழுத்திட்டுள்ள இந்த ராம்சார் ஒப்பந்தத்தின் மூலம் அந்த நாடுகளில் 53 கோடி ஏக்கர் பரப்பளவு உள்ள 2,225 சதுப்பு நிலங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அந்த ஒப்பந்தம் மிகப் பரந்த ஏரிகள், ஆறுகள், பல்வேறு தரப்பட்ட சதுப்பு நிலங்கள், ஈர புல்வெளிகள், மலையுச்சி சுனைகள், முகத்துவாரங்கள், அலைபரவும் கடற்கரைப் பாகங்கள், பாலைவனச் சோலை, அலையாத்திக் காடுகள், பவளப்பாறைகள், உவர் நிலங்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் ஆகியவற்றை சதுப்பு நிலங்களாக குறிக்கிறது.

sathuppu nilam

அறிவுப்பூர்வமான பயன்பாடு என்பதற்கு சூழலியல் பண்புகளை நீடித்த நிலையான வளர்ச்சிக்கு நிர்வாகத்தின் மூலம் நடைமுறைப்படுத்துதல் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கும் மிகப்பெரிய நன்மைகள் இரண்டு. ஆண்டு முழுவதும் ஈரமாகவும், குறைந்தது, 25 அடி ஆழம் வரை சேறும் சகதியுமாக காட்சியளிக்க கூடிய சதுப்பு நிலங்கள், நிலத்தடி நீரை பாதுகாப்பதோடு, கடல்நீரை உட்புகாமலும் காக்கின்றன.ஏரி போன்ற நீர்நிலைகள், நீரை தேக்கி வைப்பதும், வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாப்பதும், நிலத்தடி நீர் அளவை உயர்த்தி, கோடைக் காலத்தில், வறட்சி ஏற்படாமலும் பாதுகாப்பவை. சதுப்பு நிலத்தையும், ஏரிகளையும் பாதுகாக்க வேண்டியது தற்போது காலத்தின் கட்டாயமாகி வருகிறது என்பதை, நாம் உணர வேண்டும்.

newstm.in

Next Story
Share it