Theme Check

மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் அவசர உத்தரவு! காரணம் என்ன?

மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் அவசர உத்தரவு! காரணம் என்ன?

மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் அவசர உத்தரவு! காரணம் என்ன?
X

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்திருந்தது. இதனால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்திருந்தனர். இந்நிலையில் சீனா, தென் கொரியா நாடுகளில் கொரோனா தொற்றின் பரவல் தற்போது அதிகரித்து வருகிறது.

இதனால் மீண்டும் உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறிவருகிறார்கள். இந்தியாவிலும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது.

ஆனாலும் ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா தொற்றின் 4வது அலை ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்ஃப்ளூயன்சா போன்ற உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் தொற்றுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

test

இதற்கான சோதனைகளை மீண்டும் தொடங்கவேண்டும் என மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சுவாசத் தொற்றுகளோடு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் சோதனை செய்யப்படும்போது புதிய கொரோனா தொற்றுகளைக் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசிகளை போட தகுதியுடையவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it