நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் பெண் சடலம்..!!
நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் பெண் சடலம்..!!

சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் திங்கட்கிழமை காலை நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து பராமரிப்புப் பணிக்காக சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 4-ம் தேதி இரவு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஊழியர்கள் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பெட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து ஊழியர்கள் ரயில் பெட்டியை திறந்து உள்ளே சென்று பார்த்தன்ர. அங்கு அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து தாம்பரம் ரயில்வே காவல் துறையினருக்கும், அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த ரயில்வே காவல் துறையினர் அழுகிய நிலையிலிருந்த பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தாம்பரம் ரயில்வே காவல் துறையினர் அழுகிய நிலையில் உயிரிழந்த பெண் யார், எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

