Theme Check

இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்!!

இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்!!

இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்!!
X

கானா இசையமைப்பாளர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தானும், தன் கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு கானா பாடல்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளரான சபேஷ் சாலமன் என்பவருடன் தனக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் தனக்கு தனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

abuse

அதுபோன்ற நேரங்களில் தன்னுடன் தனியாக இருக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்த அவர், தற்போது சமூக வலைத்தளத்தில் அவற்றை வெளியிடுவேன் எனக் கூறி தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் சபேஷ் சாலமன் நடத்தும் யூடியூப் சேனலில் தன்னுடைய ஆபாசமான போட்டோ வீடியோக்களை வெளியிட்டதாகவும், மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

sabesh

தானொரு இசையமைப்பாளர் என்பதால் சபேஷ் சாலமன் பாட்டு பாடியே தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட பெண் ஆடியோ ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it