Theme Check

ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல்!!

ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல்!!

ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல்!!
X

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி பயணித்தார்.

இந்த சூழலில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கற்கள், கட்டைகளை கொண்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

admk office1

அவ்வழியாக வந்த பேருந்து அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதி போர்க்களம் போல காட்சி அளிக்கிறது.

admk office1

முன்னதாக பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுலகத்தின் கதவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் அடித்து உடைக்கப்பட்டது. கதவை அடித்து உடைத்த .பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை கழகம் உள்ளே நுழைந்தனர். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஈபிஎஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டன.

newstm.in

Next Story
Share it