Theme Check

மதுவிருந்தில் சண்டை… நண்பர் அடித்துக் கொலை!!

மதுவிருந்தில் சண்டை… நண்பர் அடித்துக் கொலை!!

மதுவிருந்தில் சண்டை… நண்பர் அடித்துக் கொலை!!
X

சென்னை சோழவரம் அடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (21) என்பவர் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பணி செய்து வந்தார். இவர் தனது பிறந்தநாளுக்கு தனது நண்பர்களுக்கு மதுவிருந்து வைத்தார்.

அலமாதி ஏரியில் மாரிமுத்து தனது நண்பர்கள் ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி, பின்னர் மது அருந்தினர். அப்போது திடீரென நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து ராமமூர்த்தி, மாரிமுத்துவை கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் மாரிமுத்து மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகிய இருவரும் மாரிமுத்துவை சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

death

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீஸார் நண்பர்கள் ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it