திரைத்துறையினர் அதிர்ச்சி.. கார் விபத்தில் சிக்கிய கேஜிஎஃப் நடிகர் !!

திரைத்துறையினர் அதிர்ச்சி.. கார் விபத்தில் சிக்கிய கேஜிஎஃப் நடிகர் !!

திரைத்துறையினர் அதிர்ச்சி.. கார் விபத்தில் சிக்கிய கேஜிஎஃப் நடிகர் !!
X

கேஜிஎஃப் நடிகர் கார் விபத்தில் சிக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரபல இயக்குநரான பிரசாந்த நீல் இயக்கத்தில் யஷ் நடித்து வெளியான படம் கேஜிஎஃப். இந்தப் படம் இரண்டு சீரிஸ்களாக வெளியானது. முதல் படத்தின் வெறித்தனமான ஹிட்டை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் வெளியானது.

kgf-chapter-2

இரண்டாவது பாகமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடித்தவர் நடிகர் அவினாஷ். இவர் பெங்களூரில் தனது காரில் ஜிம்முக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்தில் சிக்கியது. சிக்னலில் நின்று கொண்டிருந்த போது அவினாஷின் பென்ஸ் கார் மீது ஒரு கன்டெய்னர் லாரி மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பித்துள்ளார் அவினாஷ்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, காலை சரியாக 6.05 மணிக்கு நான் உடற்பயிற்சி கூடத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தேன்.

kgf-chapter-2

அப்போது அனில் கும்ப்ளே சர்கிள் அருகே ஒரு லாரி சிகப்பு விளக்கை மீறி வேகமாக வந்து என் கார் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் எனக்கு காயம் ஏற்படவில்லை. கார் மட்டுமே சேதமடைந்தது. கடவுளுக்கும் உங்கள் அன்புக்கும் நன்றி, என்று தெரிவித்துள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it