இவர்களுக்கான நிதியுதவி ரூ.1 லட்சமாக உயர்வு.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
இவர்களுக்கான நிதியுதவி ரூ.1 லட்சமாக உயர்வு.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு பணி அமைப்பு நிதி மூலம் கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து 10 ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஆதிதிராவிடர் அல்லாத இனத்தை சேர்ந்த ஒரு எழுத்தர் உள்ளிட்ட 11 எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்பை தெரிவு செய்து அவர்களுக்கு தலா ரூ.50,000 அல்லது புத்தகம் வெளியிட ஆகும் செலவு, இவற்றில் எது குறைவோ அதை அரசு வழங்கி வந்தது.
இந்நிலையில், வரும் நிதியாண்டு முதல் இந்த நிதியுதவியை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவி தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த மாவட்டங்களில் ஊடகங்கள் மற்றும் இணையதளம் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். ஒரு முறை தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே மறுமுறை விண்ணப்பிக்க வேண்டும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

