Theme Check

ஏப்ரல் 1-ம் தேதி முதல் சம்பள உயர்வு.. முதல்வர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

ஏப்ரல் 1-ம் தேதி முதல் சம்பள உயர்வு.. முதல்வர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

ஏப்ரல் 1-ம் தேதி முதல் சம்பள உயர்வு.. முதல்வர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!
X

புதுச்சேரி மாநில சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று கடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

ஆனால், அவர்களுக்கு இன்னும் சம்பள உயர்வு வழங்கப்படாமல் இருந்து வந்தது. இவர்கள், தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு தற்போது சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

“புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர், செவிலியர், லேப் டெக்னீசியன், தொழில்நுட்ப உதவியாளர், சமூக பணியாளர், கிராமப்புற செவிலியர், கண் பரிசோதகர் என 682 பேருக்கு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும்.

இதில், மருத்துவர்களுக்கு ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், மருத்துவ உதவியாளர்களுக்கு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.13 ஆயிரமாக உயர்த்தப்படும்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து சம்பள உயர்வு தொடர்பான உத்தரவு சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமியின் இந்த அறிவிப்பால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:
Next Story
Share it