Theme Check

இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்!!

இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்!!

இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்!!
X

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேரையும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்து சிறையில் அடைத்தது.

இதையடுத்து நேற்று ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

fishermna

அதைத் தொடர்ந்த இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.

இது தொடர்பாக மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் கைது நடவடிக்கை தொடர்கிறது.

newstm.in

Next Story
Share it