ரூ.28 கோடி மதிப்பிலான அம்பர் கிரிஸை போலீஸிடம் ஒப்படைத்த மீனவர்கள்!!
ரூ.28 கோடி மதிப்பிலான அம்பர் கிரிஸை போலீஸிடம் ஒப்படைத்த மீனவர்கள்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குமீன்பிடிக்கச் சென்ற போது 28.400 கிலோ அம்பர் கிரீஸை (திமிங்கிலத்தின் வாந்தி) கண்டெடுத்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கரைக்குக் கொண்டுவரப்பட்ட அம்பர் கிரீஸை மீனவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, அந்த அம்பர் கிரீஸ்களை கடலோர காவல்துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
அதனை ஆய்வுக்காக ராஜீவ்காந்தி உயிரியல் தொழில்நுட்பவியல் மையத்திற்கு (RGCB) அனுப்பிவைத்துள்ளனர். இந்த அம்பர் கிரீஸின் மதிப்பு ரூ.28 கோடி என்று சொல்லப்படுகிறது.

உலக சந்தையில் ஒரு கிலோ அம்பர் கிரீஸின் மதிப்பு ஒரு கோடியாக இருக்கிறது. அம்பர் கிரீஸ் என்பது இயற்கையாக திமிங்கிலத்தின் வயிற்றிலிருந்து வெளிவருவது. இது மெழுகு போன்று திடவடிவில் இருக்கும்.
இந்த அம்பர் கிரீஸ்கள் பெரும்பான்மையாக வாசனைத் திரவியங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த அம்பர் கிரீஸ்கள் சில மருத்துவ பயன்பாட்டிற்கும் உதவுகிறது. இதனால், அம்பர் கிரீஸ்கள் கடலில் கிடைக்கும் புதையலாகப் பார்க்கப்படுகிறது. இதனை ’மிதக்கும் தங்கம்’ என்றும் கூறுகிறார்கள்.
newstm.in

