Theme Check

மதுவுடன் மலர் கண்காட்சி கொண்டாட்டம்.. 5 நாட்களில் ரூ. 10 கோடிக்கு விற்பனை..!

மதுவுடன் மலர் கண்காட்சி கொண்டாட்டம்.. 5 நாட்களில் ரூ. 10 கோடிக்கு விற்பனை..!

மதுவுடன் மலர் கண்காட்சி கொண்டாட்டம்.. 5 நாட்களில் ரூ. 10 கோடிக்கு விற்பனை..!
X

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடை சீசனை முன்னிட்டு, கடந்த 20-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை 5 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில், பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு பல வண்ண அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

இதை கண்டு ரசிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தந்தனர். இதனால், நீலகிரி மாவட்டமே களைகட்டி காணப்பட்டது.

இந்நிலையில், மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் 10 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது; “நீலகிரி மாவட்டத்தில் 75 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டியில் சீசன் துவங்கியதை அடுத்து, மதுக்கடைகளில் கூடுதலாக மது வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

தினமும் சராசரியாக 1.80 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது. சீசனையொட்டி கடந்த ஒரு மாதமாக சராசரி விற்பனை அதிகரித்தது. 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 5 நாட்கள் மலர் கண்காட்சியையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.

அந்த நாட்களில் மது விற்பனையும் அதிகரித்தது. மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களில் சராசரி விற்பனை அதிகரித்து, 10 கோடி ரூபாய்க்கு மதுபான வகைகள் விற்பனையாகியுள்ளது” என்று அவர்கள் கூறினர்.

Next Story
Share it