Theme Check

மனதை கொள்ளைகொள்ளும் உதகை பூங்காவில் இன்று மலர் கண்காட்சி !!

மனதை கொள்ளைகொள்ளும் உதகை பூங்காவில் இன்று மலர் கண்காட்சி !!

மனதை கொள்ளைகொள்ளும் உதகை பூங்காவில் இன்று மலர் கண்காட்சி !!
X

தமிழக மக்கள் சுற்றுலா செல்லவேண்டும் என்றால் அவர்களின் முதல் விருப்பமாக நீலகிரி மாவட்டம் தான் இருக்கும். இயற்கையின் மொத்த அழகையும் அங்கு கண்டு வியந்துரசிக்கலாம். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு படையெடுப்பர்.

இந்த நிலையில், தெற்காசியாவில் புகழ்பெற்ற உதகை ரோஜா பூங்காவில் இன்று மற்றும் நாளை (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ) மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது.

ooty flower

1995ஆம் ஆண்டு உதகை மலர் கண்காட்சியின் 100ஆவது ஆண்டு நினைவாக உதகை அரசு ரோஜா பூங்கா தொடங்கப்பட்டு தோட்டக்கலைத்துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. இங்கு 31ஆயிரத்து 500 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 5 அடுக்குகளைக் கொண்ட இந்த தோட்டம் 4 ஹெக்டர் பரப்பில் அமைந்துள்ளது.

oot

சிறப்பு மிக்க இந்த பூங்காவில் தற்போது பூத்துக்குலுங்கும் ரோஜாக்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்க ஏதுவாக இன்றும், நாளையும் கண்காட்சி நடைபெறவுள்ளது.

2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கண்காட்சி என்பதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இதனையொட்டி அங்கு விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

newstm.in

Next Story
Share it