Theme Check

குஷ்புவை தொடர்ந்து நக்மா.. காங்கிரஸ்க்கு டாட்டா காட்ட முடிவு !!

குஷ்புவை தொடர்ந்து நக்மா.. காங்கிரஸ்க்கு டாட்டா காட்ட முடிவு !!

குஷ்புவை தொடர்ந்து நக்மா.. காங்கிரஸ்க்கு டாட்டா காட்ட முடிவு !!
X

இந்தியா முழுவதும் இருந்து நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அனைத்து கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்தது. இதில் பெரும்பான்மையான கட்சிகள் உறுப்பினர்களை உறுதி செய்துவிட்டன. சில இடங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சியின் தலைமை சார்பில் கடந்த மே 29ஆம் தேதி கட்சி சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அந்தப் பட்டியலில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கட்சியின் மூத்த தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கான் உள்ளிட்டோருக்கு மீண்டும் கட்சித்தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளது தெரியவந்தது. அதே நேரத்தில் கட்சியின் பொதுச்செயலாளரும் செய்தி தொடர்பாளருமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட புதுமுகங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
nagma
இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மூத்த தலைவர்களுக்கு மட்டுமே தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர். குறிப்பாக பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளருமான நக்மா கட்சி தலைமையின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நக்மா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், `கட்சியில் இணைந்தபோது 2003-2004 ஆண்டுகளில் மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என சோனியா காந்தி உறுதி அளித்திருந்தார். கட்சியில் இணைந்து 18 ஆண்டுகளாகியும் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மகாராஷ்டிராவில் இருந்து இம்ரானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை வாய்ப்புக்கு எனக்கு தகுதி இல்லையா, என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

nagma

முன்னதாக, காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தி தெரிவித்த நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார். முதலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துகளையும் பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளையும் குஷ்பு வெளிப்படையாகவே தெரிவித்து வந்தார். அதன்பின்னரே அவர் பாஜகவில் இணைந்தார். அதேபோல், நக்மாவும் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருவதால், குஷ்பு பாணியில் நக்மாவும் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

newstm.in

Next Story
Share it