கால்பந்து : ஜாம்பவான் அணிகளை தெறிக்கவிட்ட இந்திய சிறுவர்கள்!!
கால்பந்து : ஜாம்பவான் அணிகளை தெறிக்கவிட்ட இந்திய சிறுவர்கள்!!

துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கால்பந்து போட்டியில் இந்தியாவை சேர்ந்த சிறுவர்கள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
முதல் முறையாக துபாயில் மினா கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பார்சிலோனா, மான்செஸடர் சிட்டி, லா லிகா உள்ளிட்ட கிளப்களை சேர்ந்த சிறுவர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவில் இருந்து மினர்வா கிளப்பை சேர்ந்த சிறுவர்கள் போட்டியில் பங்கேற்ற சென்றனர். முதல் முறையாக வெளிநாட்டில் விளையாட சென்றவர்கள் தங்களது திறமையால் உலக அளவிலான சிறந்த அணிகளை தோற்கடித்து கோப்பை வென்றுள்ளனர்.

இதனால் உலகின் கவனமே இந்திய சிறுவர்கள் மீது திரும்பியுள்ளது. மினர்வா கிளப் பஞ்சாப் பகுதியில் செயல்பட்டு வருகிறது. அதில் மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சிறுவர்கள் உள்ளனர்.

திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் துபாயை சேர்ந்த லா லிகா கிளப் உடன் இந்தியாவை சேர்ந்த மினர்வா கிளப் மோதியது. அதில் 4க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் மினர்வா கிளப் வெற்றி பெற்றது. தியாம் என்ற சிறுவன் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
newstm.in

