Theme Check

வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன்… இந்திய அணி அசத்தல்!

வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன்… இந்திய அணி அசத்தல்!

வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன்… இந்திய அணி அசத்தல்!
X

தாமஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பாங்காக்கில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்த வரலாற்று சாதனையை நிகத்தியுள்ளது இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி. 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியாவை இந்தியா 3க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.

இறுதிப்போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தோனேசியாவின் அந்தோனி ஜின்டிங்கை வீழ்த்தி லக்ஷ்யா சென் இந்தியாவை 1-0 என்று முன்னிலைப்படுத்தினார். ஒரு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சென் 8-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் ஜின்டிங்கை தோற்கடித்தார்.

thomas cup1

2ஆவது போட்டியில் சாத்விக் சாய்ராஜ் ரன்கிரெட்டே மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 23-21, 21-19 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் முகமது அஹ்சன் மற்றும் கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோவை வீழ்த்தியது.

3ஆவது ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 23-21 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் ஜொனாடன் கிறிஸ்டியை தோற்கடித்தார். தாமஸ் கோப்பை 73 ஆண்டுகால வரலாற்றில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு கூட இதுவரை இந்தியா சென்றதில்லை.

thomas cup2

ஆனால் தற்போது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ள்ளது. இதனையடுத்து இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it