Theme Check

முதல்முறையாக நம்ம ஊரில் பெண் சோப்தார்!!

முதல்முறையாக நம்ம ஊரில் பெண் சோப்தார்!!

முதல்முறையாக நம்ம ஊரில் பெண் சோப்தார்!!
X

சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் சோப்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதிகள் தங்களது அறையிலிருந்து நீதிமன்ற விசாரணை அறைக்கு வந்துசெல்லும்போது, எளிதாக கூட்டத்தை கடந்து செல்லும் வகையில் சோப்தார்கள் முன் செல்வர். அவர்கள் வெள்ளை உடை அணிந்திருப்பார்கள்.

தேசிய சின்னம் பொதித்த சிகப்பு தலைப்பாகை, உடலின் குறிக்கே சிகப்பு பட்டை அணிந்து, செங்லோலை ஏந்தி, வழிவிடும்படி ஒலி எழுப்பிக் கொண்டே நீதிபதிகளுக்கு முன்னர் செல்வர். காலை முதல் மாலை வரை நீதிபதி இருக்கும் இடத்திலேயே இருப்பார்கள்.

chn hc 1

இந்த பணிக்கு சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். உதவியாளர் பணிக்கு தேர்வாகி பணியாற்றி வந்த அந்தப் பெண்ணை, தனக்கு சோப்தாராக நியமிக்கும்படி பெண் நீதிபதி ஒருவர் கேட்டு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it