Theme Check

யாருக்காக இரவு 12 மணி வரை..?: நைட்டியுடன் சென்ற திமுக கவுன்சிலருக்கு நீதிபதி கேள்வி..!

யாருக்காக இரவு 12 மணி வரை..?: நைட்டியுடன் சென்ற திமுக கவுன்சிலருக்கு நீதிபதி கேள்வி..!

யாருக்காக இரவு 12 மணி வரை..?: நைட்டியுடன் சென்ற திமுக கவுன்சிலருக்கு நீதிபதி கேள்வி..!
X

சேலம் மாநகராட்சியின் 40 வது வார்டு திமுக கவுன்சிலர் மஞ்சுளா. இவர், அம்மாபேட்டையில் உள்ள சீதா ராமச்சந்திரன் கோவிலுக்கு நைட்டியுடன் சென்றுள்ளார்.

அப்போது, “கோவிலுக்குள் நைட்டி அணிந்து வரக்கூடாது; முறையான உடை அணிந்துதான் வர வேண்டும்” என்று, அர்ச்சகர் கண்ணன் கூறியுள்ளார். இதனால், கவுன்சிலருடன் வந்த ஆதரவாளர்கள் அர்ச்சகரை தாக்க முயற்சித்துள்ளனர்.

தன்னை கோவிலுக்குள் விடாமல் அர்ச்சகர் தடுத்ததாகவும், ஆகம விதிகளுக்கு முரணாக இரவு 12 மணி வரை கோவிலை திறந்து வைத்திருந்ததாகவும், பெண்களிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை என்றும் அர்ச்சகர் கண்ணனுக்கு எதிராக கவுன்சிலர் மஞ்சுளா குற்றம் சாட்டினார். இதையடுத்து அர்ச்சகர் கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நைட்டியுடன் கோவிலுக்குள் வந்த பெண் திமுக கவுன்சிலர்.. அர்ச்சகரை திட்டிய  கவுன்சிலர் - வைரல் வீடியோ
இந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அர்ச்சகர் கண்ணன்.

அந்த மனுவில், தனக்கு எதிராக கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் எப்போது நடந்தது என்பதற்கான விவரங்களை எதிர் தரப்பினர் கூறவில்லை.

யாருக்காக நான் இரவு 12 மணி வரை கோவிலை திறந்து வைத்திருந்தேன் என்ற விவரங்களையும் அவர்கள் சொல்லவில்லை. இதனால் எனக்கு எதிரான குற்றப்பத்திரிகை மற்றும் சஸ்பெண்ட் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

அர்ச்சகர் கண்ணனின் மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆ.ர் சுவாமிநாதன், இந்த மனு தொடர்பாக வரும் ஜூன் 1-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கோவில் செயல் அலுவலர் மற்றும் திமுக கவுன்சிலர் மஞ்சுளா ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story
Share it