Theme Check

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!!
X

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகம் முன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அங்கு நடத்த முடியாததால், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் நடைபெற உள்ளது.

அ.தி.மு.க-வில் மொத்தம் 65 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 62 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், 3 எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் உள்ளனர். அதிமுகவின் ஆதரவை பாஜக கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு ஏற்கனவே நேரில் சந்தித்து கேட்டிருந்த நிலையில் அது தொடர்பாக விவாதிக்க இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட உள்ளதாக தெரிகிறது.

Next Story
Share it