#BREAKING:- சொத்துக் குவிப்பு வழக்கு.. முன்னாள் முதல்வருக்கு 4 ஆண்டு சிறை..!
#BREAKING:- சொத்துக் குவிப்பு வழக்கு.. முன்னாள் முதல்வருக்கு 4 ஆண்டு சிறை..!

கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை, முறைகேடாக 6.09 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில், சவுதாலாவுக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது.

அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. தண்டனை அளிப்பது குறித்த வாதம் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்தது.
அதில், ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Next Story

