Theme Check

முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் பாஜகவில் இணைந்தார்!!

முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் பாஜகவில் இணைந்தார்!!

முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் பாஜகவில் இணைந்தார்!!
X

சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது, இதற்கு முதல்வராக இருந்த சரண் ஜித் சன்னிதான் காரணம் என, பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் கடுமையாக விமர்சித்தார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து கட்சித் தலைவா்கள் குறித்து அவா் தரக்குறைவான கருத்துகளைத் தெரிவித்தது தொடா்பாக விளக்கம் அளிக்கக் கோரி, கடந்த மாதம் 11-ம் தேதி சுனில் ஜாக்கருக்குக் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. எனினும் அவா் அந்த நோட்டீசுக்கு பதிலளிக்கவில்லை.

இதனையடுத்து கட்சி விரோத நடவடிக்கைகளைக் காரணம் காட்டி கட்சிப் பொறுப்புகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட நிலையில் கட்சியைவிட்டே விலக முடிவெடுத்த சுனில் ஜாக்கர், கடந்த 14-ம் தேதி ஃபேஸ்புக் நேரலையில் ‘மன் கி பாத்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அப்போது, “காங்கிரஸுக்கு குட்பை மற்றும் குட்லக் என கூறி, தனக்கு எதிரான நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய கட்சியை சேர்ந்தவர்களை கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தியை நல்ல மனிதர் என்றும், துதிபாடிகளிடம் இருந்து அவர் ஒதுங்கி இருக்க வேண்டும்” என்றும் அறிவுரை வழங்கினார்.

இந்நிலையில், புதுடெல்லியில் பாஜகவின் தலைமையகத்தில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் பாஜகவில் இணைந்துள்ளார்.

Tags:
Next Story
Share it