Theme Check

பங்குச் சந்தை முறைகேடு.. NSE-யின் முன்னாள் அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியன் கைது !

பங்குச் சந்தை முறைகேடு.. NSE-யின் முன்னாள் அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியன் கைது !

பங்குச் சந்தை முறைகேடு.. NSE-யின் முன்னாள் அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியன் கைது !
X

என்எஸ்இ எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் இமயமலையில் இருக்கும் ஒரு சாமியாரின் பரிந்துரையின் பேரில் ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை என்.எஸ்.இ-ன் ஆலோசகராக நியமித்ததாக கூறப்படுகிறது. அதுவும் இந்த பணியிடத்தை நிரப்ப எந்தவித விளம்பரமும் செய்யாமல் வெறும் ஆனந்த் சுப்பிரமணியனை மட்டும் நேர்முகத்தேர்விற்கு அழைத்திருக்கிறார். இதேபோல், என்எஸ்இ தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் சித்ரா மற்றும் ஆனந்த் ஆகியோர் இணைந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இமயமலையில் இருக்கும் ஒரு சாமியாரின் பரிந்துரையின் பேரில் ஆனந்திற்கு அதிக சம்பளம் கொடுத்து வந்ததாகவும் பகீர் தகவல் வெளியானது.

cbi

சித்ரா ராமகிருஷ்ணா, பங்குச் சந்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டு உயர் அதிகாரிகளை நியமனம் செய்ததாகக் கூறி அவருக்கு SEBI அமைப்பு, 3 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. கடந்த 2013-16ஆம் ஆண்டுக்கு இடையே என்எஸ்இ தலைமை நிர்வாக அதிகாரியாகவும், எம்.டி-யாகவும் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா பங்குச்சந்தை தொடர்பான தகவல்கள், டிவிடெண்ட், கம்பெனி ஆண்டறிக்கை விபரம் உட்பட அனைத்து அம்சங்கள் குறித்தும் ரகசிய சாமியாருடன் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

cbi

இந்நிலையில், அந்த சாமியாரின் பரிந்துரையின் பேரில் ஆனந்த் சுப்பிரமணியனை என்.எஸ்.இ-ன் ஆலோசகராக நியமித்ததாகவும் கூறப்படுகிறது. தேசிய பங்குச் சந்தையில் பணியாற்றிய போது ஆல்கோ டிரேடிங் ஒப்பந்தத்தின் போது தரகர்களுக்கு உதவி புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சித்ரா மற்றும் ஆனந்த் இருவரும் இணைந்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேசிய பங்குச் பங்குசந்தை முறைகேடு வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ கைது செய்துள்ளது.

சமீபத்தில் சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக வழக்கு சிபிஐ வசம் கைமாறியுள்ளது. இந்நிலையில் ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ கைது செய்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

newstm.in


Tags:
Next Story
Share it