#BREAKING :- முன்னாள் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!
#BREAKING :- முன்னாள் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 2004 - 2005-ம் ஆண்டில் என்.டி.திவாரி அரசில் இணை அமைச்சராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திர பகுகுணா.
இந்நிலையில், பகுகுணா தன்னுடைய பேத்திக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவருடைய மருமகள் சமீபத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ராஜேந்திர பகுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து 59 வயதான ராஜேந்திர பகுகுணா மிகுந்த மன அழுத்தத்திலும், கவலையிலும் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அவர் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த கொடூர முடிவை அவர் எடுத்துள்ளார்.
மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் பலமுறை காவல்துறையின் அவசர எண்ணான 112-ல் அழைத்து தற்கொலை செய்து கொள்ளும் தனது திட்டம் குறித்து தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீசார் பஹுகுணாவின் வீட்டிற்கு விரைந்தனர். ஆனால் அப்போது அவர்களை பார்த்ததும், அவர் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி, பின் தன்னைத்தானே சுட்டுக்கொள்ளப் போவதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து போலீசார் அவரை தற்கொலை செய்து கொள்ள விடாமல் தடுக்க முயன்றனர்.
![]()
ஆனால் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக திரும்ப திரும்பக் கூறிய ராஜேந்திர பகுகுணா, திடீரென துப்பாக்கியை எடுத்து மார்பில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையில் அவரது மகன் அஜய், தனது தந்தையை தற்கொலைக்கு தூண்டியதாக தனது மனைவி, மாமனார் மற்றும் அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் மீது புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

