கேப் டிரைவராக பணியாற்றி வரும் முன்னாள் அமைச்சர்!!
கேப் டிரைவராக பணியாற்றி வரும் முன்னாள் அமைச்சர்!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர், உபேர் நிறுவனத்தின் கார் டிரைவராக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.
அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். திடீரென பணக்காரர்கள் ஆனவர்களும் உண்டு. ஏழைகள் ஆகியும் இருக்கிறார்கள். அந்தவகையில் ஆப்கானிஸ்தானில் முன்னாள் அமைச்சர் தற்போது கார் டிரைவராக பணியாற்றி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து மக்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறினர். அரசியல் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது தலிபான்கள் அங்கு ஆட்சி செய்து வருகிறார்கள்.

பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் அவருடைய விதிப்படி ஆட்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் தலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் நிதியமைச்சராக இருந்தவர் தற்போது டிரைவராக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சராக செயல்பட்டவர் காலித் பயெண்டா. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இவர் நாட்டின் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “என்னால் இயன்ற விதத்தில் எனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக உழைக்கிறேன். அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறப்பட்டதால்தான் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு அமெரிக்காதான் காரணம் எனத் தெரிவித்தார்.
newstm.in

