Theme Check

பாஜகவில் இணைந்த பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகனின் மாஜி மனைவி..!!

பாஜகவில் இணைந்த பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகனின் மாஜி மனைவி..!!

பாஜகவில் இணைந்த பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகனின் மாஜி மனைவி..!!
X

பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர் பண்ருட்டி வேல்முருகன். பாமகவின் ஆற்றல்மிக்க பேச்சாளராக இருந்த இவர், பண்ருட்டி தொகுதியிலிருந்து 2001 மற்றும் 2006-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்றார். அதன்பின், கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்படார்.

இதனையடுத்து, தமிழர் வாழ்வுரிமை கட்சி என்ற கட்சியை தொடங்கி தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். மேலும், அதிமுக பாஜகவுக்கு எதிரக பேசி வந்த அவர் திமுகவுடன் சேர்ந்தார்.

Velmurgan-exwife

இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு நீண்ட காலத்திற்கு பிறகு சட்டபேரவையில் நுழைந்தார். இதையடுத்து நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக நிர்வாகிகள் தங்கள் கட்சியினரை மரியாதை குறைவாக நடத்துவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார்.

அவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கி வரவேற்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வேல்முருகனிடம் இருந்து காயத்ரி விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it