Theme Check

பொதுத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக் இலவச ஹெலிகாப்டர் சவாரி.. அரசு அறிவிப்பு

பொதுத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக் இலவச ஹெலிகாப்டர் சவாரி.. அரசு அறிவிப்பு

பொதுத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக் இலவச ஹெலிகாப்டர் சவாரி.. அரசு அறிவிப்பு
X

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் மந்திரி பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தை போன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் சிறப்பு பரிசு ஒன்று அறிவித்துள்ளது.

அதாவது, தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 420 கி.மீ. தொலைவில் உள்ள பலராம்பூரில் தனது தொகுதிவாரி மக்களுடுன் முதலமைச்சர் பூபேஷ் பாகல் நேற்று ள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் பிடிக்கிற மாணவர்களுக்கு பரிசாக ஹெலிகாப்டரில் சவாரி அழைத்துச்செல்லப்படுவர்.

jarkant student

இதே மாவட்டங்களில் முதல் இடம் பிடிப்போருக்கும் இந்த ஹெலிகாப்டர் சவாரி காத்திருக்கிறது. குழந்தைகளுக்கு உத்வேகம் அளிக்கவும், ஊக்குவிக்கவும் இந்த ஹெலிகாப்டர் சவாரிகளை மாநில அரசு வழங்கும்.

முதலமைச்சரின் ஹெலிகாப்டர் சவாரி மூலம் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றவர்கள் புதிய உத்வேகம் பெறுவார்கள். ஹெலிகாப்டர் பயணம், குழந்தைகளின் மனங்களில் வாழ்க்கையிலும் விண்ணுயரப் பறக்கும் விருப்பத்தை வளர்க்கும் என்பது எனது நம்பிக்கை. அவர்கள் லட்சியத்தை அடைவதற்காக தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வார்கள் என்றும் நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it