காவி முதல் கூர்கா வரை.. 'பீஸ்ட்' டிரெயிலரையே வச்சி செய்யும் நெட்டிசன்கள் !!
காவி முதல் கூர்கா வரை.. 'பீஸ்ட்' டிரெயிலரையே வச்சி செய்யும் நெட்டிசன்கள் !!

டாக்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் டிரெயிலர் நேற்று மாலை வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல சாதனைகள் படைக்க தொடங்கியுள்ளது பீஸ்ட் டிரெயிலர். அதேநேரத்தில், வழக்கம்போல் டிரெயிலரை வைத்து ரசிகர்கள் அதனை பகுப்பாய்வு செய்யவும் தொடங்கினர்.
தொடக்கமே பாஜக மீது தாக்குதான். அதாவது, ஒரு துணியை விஜய் கிழித்துக்கொண்டு வெளியே வரும் காட்சியில் துணி காவி நிறத்தில் இருக்க இது அரசியல் குறியீடு என பேச தொடங்கினர்.

இது ஒருபுறமிருக்க படத்தின் ஒட்டுமொத்த கதையும் டிரெயிலரில் சொல்லப்பட்டது. ஒரு வணிக வளாகத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்து ஒட்டுமொத்த வணிக வளாகத்தை பிடித்துக்கொள்ள அதற்குள் மாட்டிக் கொண்ட மக்களை மீட்கும் கதை தான் படம் என தோன்றுகிறது. உள்ளே சிக்கியிருக்கும் மக்களில் ஒருவராக முன்னால் இந்திய உளவுத்துறை அதிகாரியான விஜய் இருப்பது படத்தின் ஒருவரி என தெரிய வந்தவுடன், இது யோகி பாபு நடிப்பில் வெளியான குர்கா திரைப்படத்தின் கதை என ரசிகர்கள் கிண்டல் செய்யத் தொடங்கினர்.
கூர்கா படத்தில் ஒரு வணிக வளாகத்திற்குள் தீவிரவாதிகள் அனைவரையும் சிறைபிடிக்க அந்த வணிக வளாகத்தில் காவலாளியாக இருக்கும் யோகி பாபு எப்படி அனைவரையும் மீட்டார் என்பது கதை.

இரண்டு படங்களின் கதையும் ஒத்துப் போவதால் இது குறித்து இணையதளத்தில் பேசத் தொடங்கிய ரசிகர்கள் இந்த திரைப்படத்தில் யோகிபாபு இருப்பதையும் குறிப்பிட்டு கிண்டல் செய்யத்தொடங்கினர். இதே போல கூர்கா திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை தன்னகத்தே வைத்துள்ள விஜய் தொலைக்காட்சியும் ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களில் கூர்கா படத்தை விளம்பரம் செய்ய தொடங்கியது மறைமுகமாக நெல்சனை கேலி செய்வதாக ரசிகர்களுக்கு நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் டிரெயிலரில் வரும் சில சண்டை காட்சிகள், தமிழகத்தில் ஏன் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரில் வருவதுபோன்று உள்ளது எனவும் ரசிகர்கள் பரவலாக கூறியுள்ளனர். படத்தின் டிரெயிலர் ஒரு பக்கம் சாதனை படைத்தாலும் மற்றொரு பக்கம் அதை அமர்க்களப்படுத்தும் நிகழ்வும் நடக்கிறது. ஆனால் இதெல்லாம் சாதாரணம்பா என விஜய் ரசிகர்கள் கூறிவிட்டு செல்கின்றனர்.
newstm.in

