Theme Check

தமிழகம் முழுவதும் வரும் 11ம் தேதி முதல்.. அரசு அருமையான அறிவிப்பு..!

தமிழகம் முழுவதும் வரும் 11ம் தேதி முதல்.. அரசு அருமையான அறிவிப்பு..!

தமிழகம் முழுவதும் வரும் 11ம் தேதி முதல்.. அரசு அருமையான அறிவிப்பு..!
X

தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு சேவை கட்டண சீட்டுகள் வருகின்ற ஏப்ரல் 11-ம் தேதி முதல் மின்னணு முறையில் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அந்தந்த கோவில் பெயரிலேயே ரசீதுகள் வழங்கப்பட வேண்டும். கட்டணத்தை இணைய வழியில் செலுத்துவதை திறம்பட கண்காணிக்க வேண்டும்.

இணையவழி பதிவை கோவில்கள் ஊக்குவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு பலகையை பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் திருக்கோவில்களில் கையால் எழுதும் பிரஸிடு முறை நீக்கப்பட்டு அனைத்து கட்டண சீட்டுகளும் கணினி வழியாக மட்டுமே வழங்கப்படும். இதன்மூலம், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எளிய முறையில் சேவை கட்டணங்களை பெறலாம்’ என்று தெரிவித்துள்ளது.

Next Story
Share it