மீண்டும் முதல்ல இருந்தா? - தென்னாப்பிரிக்காவில் கொரோனா 5ஆம் அலை !!
மீண்டும் முதல்ல இருந்தா? - தென்னாப்பிரிக்காவில் கொரோனா 5ஆம் அலை !!

கொரோனா எனும் கொடிய பெருந்தொற்று சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியது. எனினும் முதல் அலையின்போது சீனா தப்பித்துக்கொண்டது. உலக நாடுகள் பேரழிவை எதிர்கொண்டது. பெரியளவில் முடக்கம், கொத்துகொத்தாக மக்கள் உயிரிழந்தனர். தற்போது கொரோனா குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இந்த நிலையில், சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பெருந்தொற்று தலைதூக்கத் தொடங்கியது. அந்நாட்டின் மிகப் பெரிய வர்த்தக நகரமான ஷாங்காய்யில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, ஷாங்காய் மாகாணத்தில் முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.
இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிய நிலையில், சர்வதேச வணிக செயல்பாடும் பாதிக்கப்பட்டது. அரசின் கடுமையான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து அங்கு சில நாள்களாக கொரோனா பாதிப்பு குறைந்துவருகிறது.
ஷாங்காயில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், தற்போது அந்நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கில் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், பெய்ஜிங் மக்கள் அனைவரும் பொது வெளிக்கு வர வேண்டும் என்றால் கொரோனா பரிசோதனை எடுத்து பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா நாட்டிலும் கொரோனா ஐந்தாவது அலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாராதத்துறை அமைச்சர் ஜோ பாஹாலா தெரிவித்துள்ளார். கடந்த 14 நாள்களாக அங்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் அங்கு உருமாறிய கோவிட் தொற்று பரவல் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
அந்நாட்டில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவான நிலையில், அந்நாட்டின் மருத்துவமனைகள் உஷார் நிலையில் உள்ளன.
newstm.in