விரக்தியில் மநீம வேட்பாளர் எடுத்த விபரீத முடிவு..!
விரக்தியில் மநீம வேட்பாளர் எடுத்த விபரீத முடிவு..!

திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் வசித்து வந்தவர் மணி (வயது 55). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர் மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராக இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி நடைபெற்ற திருப்பூர் மாநகராட்சி தேர்தலில், 36-வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டார். இதனால், தேர்தல் செலவுக்காக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் ரூ. 50 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 22-ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மணி வெறும் 40 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார்.இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மணி தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
தேர்தலில் குறைவான வாக்கு வாங்கியதால் மன உளைச்சலில் இருந்த மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

