அடி தூள்... தலைவர் படத்தில் நடிக்கும் பிரியங்கா மோகன்.. ரசிகர்கள் குஷி !!

அடி தூள்... தலைவர் படத்தில் நடிக்கும் பிரியங்கா மோகன்.. ரசிகர்கள் குஷி !!

அடி தூள்... தலைவர் படத்தில் நடிக்கும் பிரியங்கா மோகன்.. ரசிகர்கள் குஷி !!
X

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் டாக்டர். நெல்சன் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகிய அறிமுகமான இவர் தன் நடிப்பால் முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்தது. அடுத்ததாக, பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து பாராட்டை பெற்றார் பிரியங்கா மோகன்.

Rajinikanth

இதனையடுத்து சிவகார்த்திகேயனுடன் இரண்டாவது முறையாக பிரியங்கா மோகன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘டான்’. இது விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில்தான் ரஜினி படத்தில் அவர் நடிக்கவுள்ளதாகத் தற்போது கூறப்படுகிறது. அடுத்தடுத்த படங்கள் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரியங்கா மோகன் நல்ல கவனம் பெற்றுவருவதால் ரஜினி படத்தில் இந்த வாய்ப்பை அவர் பெறவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

டாக்டர் படத்திய இயக்கிய நெல்சன் தற்போது விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட் படத்தையும் இயக்கியுள்ளார். இதற்கு அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 169 படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க, நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

priyanka-mohan

newstm.in

Tags:
Next Story
Share it