Theme Check

வீடுகள் தோறும் குழாய் மூலம் எரிவாயு.. முதற்கட்ட பணிகள் தொடக்கம்..!

வீடுகள் தோறும் குழாய் மூலம் எரிவாயு.. முதற்கட்ட பணிகள் தொடக்கம்..!

வீடுகள் தோறும் குழாய் மூலம் எரிவாயு.. முதற்கட்ட பணிகள் தொடக்கம்..!
X

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் மற்றும் அரசு மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படுகின்றன. மேலும், கெயில் நிறுவன எரிவாயு சேமிப்பு கிடங்கும் உள்ளது.

இந்நிலையில், ஓ.என்.ஜி.சி. மூலம் ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இப்பகுதி வழியாக நிலத்தடியில் குழாய் அமைத்து எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாலந்தரவையில் கெயில் நிறுவனம் அனுமதி பெற்று மாவட்டம் முழுவதும் தனியார் நிறுவனம் மூலம் விவசாயம், பொதுமக்கள் நிலங்களை தவிர்த்து நெடுஞ்சாலை ஓரத்தில் இரும்பு குழாய்கள் பதிக்க உள்ளனர்.

தேவைப்படும் நகர், ஊரக பகுதி வீடுகளுக்கு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, செலவு குறைந்த குழாய்வழி இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட உள்ளது.

இதற்காக நேற்று, பட்டணம் காத்தான் சேதுபதி நகரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இரும்பு குழாய்களை வெல்டிங் மூலம் இணைக்கும் பணி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. சேக் மன்சூர், சக்கரக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் யாழினி, தனியார் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.

முதற்கட்டமாக, வாலந்தரவை தொடங்கி ராமநாதபுரம் நகர் வரை 11 கி.மீ. நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கப்பட உள்ளது. அடுத்தபடியாக, பரமக்குடி என மாவட்டம் முழுவதும் தேவைப்படும் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Next Story
Share it