கோபத்தில் இருந்த காயத்ரி ரகுராமுக்கு பாஜகவில் புது பதவி !
கோபத்தில் இருந்த காயத்ரி ரகுராமுக்கு பாஜகவில் புது பதவி !

தமிழ்நாட்டில் பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கடந்த மாதம் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். மாநில தலைவர் அண்ணாமலை, எதிர்பார்த்ததை விட அதில் பல மாற்றங்களை செய்திருந்தார். தமிழக பாஜக நிர்வாகிகளின் புது பட்டியலில் பொதுச்செயலாளராக விருப்பம் தெரிவித்து இருந்த நயினார் நாகேந்திரனுக்கு, துணைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டு சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.
அதேபோன்று துணைத்தலைவரில் இருந்து பொதுச்செயலாளராக பதவி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த வி.பி.துரைசாமி அதே பொறுப்பில் உள்ளார். பொதுச்செயலாளராகயிருந்த கரு.நாகராஜனுக்கு துணைத் தலைவர் பதவி மாற்றி வழங்கப்பட்டது.

அத்துடன் ஏற்கனவே பதவி நீக்கம் செய்யப்பட்டு மீண்டுமாக கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராகயிருந்த காயத்ரி ரகுராம் மீண்டுமாக நீக்கம் செய்யப்பட்டு அப்பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டார். காயத்ரி ரகுராமனுக்கு வேறுபதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் காயத்ரி ரகுராம் பெரும் அதிருப்தி அடைந்தார்.
இதனை சுட்டிக்காட்டி அப்போது ட்விட்டரில் பதிவிட்டிருந்த காயத்ரி ரகுராம், சொந்த கட்சியினர் சிலர் என்னை அவமதித்து தூக்கி எறிந்துள்ளனர். நான் அதை என் தலையை உயர்த்தி எதிர்கொள்வேன், கூறியிருந்தார். மேலும் காயத்ரி ரகுராம் மீது கட்சியில் பலரும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். கட்சிக்குள் எதிர்ப்பு இருந்ததால் அவருக்கு பதவி வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவருக்கு புதிய பதவியை அண்ணாமலை வழங்கியுள்ளார். வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராமை நியமனம் செய்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனைசுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Thank State President @annamalai_k JI for appointing me a important role. I will do the work as per your guidance. pic.twitter.com/n6rjucYQ2V
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) June 11, 2022
newstm.in

