Theme Check

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதி.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் !!

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதி.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் !!

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதி.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் !!
X

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை வெளியிடுகிறார்.

கொரோனா தொற்றால் கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் நடைபெற்று முடிந்துள்ளது.

anbil mahesh

இதனிடையே நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி, அட்டவணை குறித்த அறிவிப்பு இன்று வெளியிடுவதாக இருந்தது.

இந்த நிலையில், தற்போது இது குறித்த புதிய தகவல் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 10,11,12 வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த தேதியை எதிர்பார்த்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

newstm.in

Next Story
Share it