திருமணமான 2 நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!
திருமணமான 2 நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!

சென்னையில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரட்டூர் பகுதியை சேர்ந்த சந்தியா (22) பட்டப்படிப்பு முடித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக, கோச்சிங் சென்டரில் படித்து வந்தார். இவரது உறவினரான சேலத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அவரும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத விரும்பி, சந்தியாவின் கோச்சிங் சென்டரிலேயே வந்து சேர்ந்தார். இந்நிலையில் சந்தியாவை ராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
இதனை அடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சந்தியா- ராஜா இருவருக்கும் பதிவு திருமணம் நடந்தது. ஆனால், சந்தியாவோ, ஆவடியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால் சந்தியாவை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர். கடந்த 4ஆம் தேதி சந்தியா- ராஜா திருமணம் முறைப்படி சேலத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு, ராஜா- சந்தியா ஆகியோர் கொரட்டூருக்கு திரும்பினர்.
இந்நிலையில் சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனை கணவர் ராஜாவும், அம்மா கவிதாவும் நேரடியாகவே பார்த்துவிட்டு, அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி சந்தியா இறந்துவிட்டார். இந்த புகாரின் அடிப்படையில் கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், சந்தியாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.. மேலும், சந்தியாவிற்கு திருமணமாகி ஒரு வாரமே ஆகிறதால் ஆர்டிஒ விசாரணையும் நடைபெற்று வருகிறது.
newstm.in

