Theme Check

கத்தி முனையில் சிறுமி பலாத்காரம்.. கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை..!

கத்தி முனையில் சிறுமி பலாத்காரம்.. கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை..!

கத்தி முனையில் சிறுமி பலாத்காரம்.. கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை..!
X

புதுச்சேரி திருபுவனை சின்னப்பேட்டை 1-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கத்தி முனையில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருபுவனை போலீசில் அந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னையில் பதுங்கியிருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மேலும், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது, குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தலைமை நீதிபதி செல்வநாதன் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மணிகண்டன் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story
Share it