Theme Check

பெண் போலீஸ் முன்னால் சட்டையை கழற்றி இளைஞர் சேட்டை!!

பெண் போலீஸ் முன்னால் சட்டையை கழற்றி இளைஞர் சேட்டை!!

பெண் போலீஸ் முன்னால் சட்டையை கழற்றி இளைஞர் சேட்டை!!
X

பெண் போலீஸ் முன்பு சட்டையை கழட்டி அநாகரீகமாக நடந்து கொண்ட இளைஞர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மும்பையைச் சேர்ந்த கணேஷ் கார்வா என்பவர் பாபு கார்வா என்பவருடன் சாலையில் தகராறில் ஈடுபட்டார். இதனையடுத்து அங்கு வந்த போலீஸார் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அங்கு போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் கணேஷ் கார்வா பெண் காவலர்கள் முன்பு சட்டையைக் கழற்றி அநாகரீகமாக நடந்து கொண்டார். இதனால், காவல்நிலையத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறி அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

police

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி எஸ்.ஆர்.நர்வாடே, காவல்நிலையத்தில் பெண் போலீஸார் முன்பு சட்டையைக் கழற்றி அநாகரீகமாக நடந்து கொண்ட கணேஷ் கார்வாவுக்கு 10 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இதுபோல பலரும் சட்டையை கழட்டி அநாகரிகமாக நடந்து கொள்வது இயல்பு என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

arrest

ஆனால் இதுபோன்ற செயலுக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இதையடுத்து கணேஷ் கார்வாவை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it