Theme Check

சொந்த வீட்டில் திருடி காதலனுக்கு 3 கார்கள் பரிசளித்த காதலி!!

சொந்த வீட்டில் திருடி காதலனுக்கு 3 கார்கள் பரிசளித்த காதலி!!

சொந்த வீட்டில் திருடி காதலனுக்கு 3 கார்கள் பரிசளித்த காதலி!!
X

காதலனுக்காகச் சொந்த வீட்டிலேயே தங்க நகைகளைத் திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு அடுத்த ஜக்கூர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த ரத்தனம்மா என்பவரின் மகள் தீப்தி, கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ரத்தனம்மாவின் வீட்டிலிருந்த ஒரு கிலோ அளவிலான பரம்பரை நகைகள் மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீப்தியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளிவந்தது.

blr1

தீப்தி, மதன் என்பவரிடம் கார் ஓட்ட பயிற்சி பெற்று வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து தீப்தி வீட்டில் நகைகள் இருப்பதைத் தெரிந்து கொண்ட மதன், அதை எடுத்து வந்தால் செட்டில் ஆகிவிடலாம் என கூறியுள்ளார்.

இதனால் தீப்தி வீட்டிலிருந்த நகைகளைக் கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து வந்து மதனிடம் கொடுத்துள்ளார். பின்னர் தீப்தியிடம் வாங்கிய நகைகளை வைத்துக் கொண்டு அண்மையில் மூன்று கார்களை மதன் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.

arrest

மேலும் 3 கார்களையும் தீப்தி பரிசாக வழங்கியதாக போலீஸாரிடம் மதன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீஸார் தீப்தி மற்றும் மதன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 3 கார்களையும், மதனிடம் இருந்த நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it