Theme Check

சிறுமியின் வயதை திருத்தி திருமணம்.. விசாரணையில் பகீர் பின்னணி !!

சிறுமியின் வயதை திருத்தி திருமணம்.. விசாரணையில் பகீர் பின்னணி !!

சிறுமியின் வயதை திருத்தி திருமணம்.. விசாரணையில் பகீர் பின்னணி !!
X

மகளின் வயதை திருத்தி திருமணம் செய்த விவகாரத்தில் தாய், இளைஞர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் அத்தனூர் விநாயகாபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் சங்கர் (27). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது. ஆனால், திருமணம் முடிந்தது 18 வயதை கடந்த பெண் அல்ல என புகார் எழுந்தது.

அதாவது, திருமணத்திற்காக சிறுமியின் வயதை ஆதார் அட்டையில் 19 வயது என முறைகேடாக திருத்தம் செய்து, அவரது தாயார், இளைஞர் சங்கருக்கு திருமணம் செய்து கொடுத்ததாக புகார் எழுந்தது. மேலும் அச்சிறுமிக்கு வெறும் 12 வயது மட்டுமே நிரம்பியதும் தெரியவந்தது.

d

இதுபற்றி அறிந்த தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய் மற்றும் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் சங்கர் ஆகியோரை கைது செய்தார்.

மேலும் சிறுமி மீட்கப்பட்டு தூத்துக்குடியில் சிறுமிகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டாள். 12 வயது சிறுமியின் வயதை திருத்தி திருமணம் செய்துவைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

newstm.in

Next Story
Share it