சென்னையில் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு!!
சென்னையில் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு!!

சென்னையில் இன்று நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திமுக ஆட்சி அமைந்த பின்னர், துபாய், அபுதாபி ஆகிய நாடுகளுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து வந்தார்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இம்மாநாட்டில் புதிய தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொள்கிறது.

இதன் மூலம் மூவாயிரத்து 494 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் கிடைக்கும் என்றும், 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது. 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
இது தவிர 12 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் 94 ஆயிரத்து 975 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

