Theme Check

உடனே போங்க.. இன்று மாலை 5 மணி வரைதான் டைம்..!

உடனே போங்க.. இன்று மாலை 5 மணி வரைதான் டைம்..!

உடனே போங்க.. இன்று மாலை 5 மணி வரைதான் டைம்..!
X

தமிழகம் முழுவதும், பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 13 ஆயிரத்து 331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அவற்றை, தற்காலிக ஆசிரியர் நியமனம் மூலம் நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் மற்றும் தகுதி வாய்ந்தவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் கடந்த 4-ம் தேதி முதல் மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் உள்ள 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று (6-ம் தேதி) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

மேலும், சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story
Share it