ஒரு மணி நேரத்திற்கு முன்பு பள்ளிக்கு... அரசு அதிரடி உத்தரவு!!

ஒரு மணி நேரத்திற்கு முன்பு பள்ளிக்கு... அரசு அதிரடி உத்தரவு!!

ஒரு மணி நேரத்திற்கு முன்பு பள்ளிக்கு... அரசு அதிரடி உத்தரவு!!
X

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன்படி, அனைத்து ஆசிரியர்களும் பள்ளி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும், வகுப்பறையில் ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது, மாணவர்களை சொந்த வேலைக்கு ஆசிரியர்கள் வெளியே அனுப்ப கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் குடிநீர் பிரச்னை, கழிவறை பிரச்னை எனஎதைப்பற்றியும் பத்திரிகையாளர்களிடம் ஆசிரியர்கள் வாய் திறக்கக் கூடாது, பள்ளிகளில் எந்த நிகழ்வு நடந்தாலும், உடனடியாக முதன்மை கல்வி அலுவலரின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Teacher

மாணவர்களுக்குள் அடித்துக்கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக முதன்மை கல்வி அலுவலரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அவர்கள் அனுமதி பெற்றே, பத்திரிகைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விட்டால், முதன்மை கல்வி அலுவலருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும், மரத்தடியில் வகுப்புகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Teacher

சத்துணவு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா, முட்டை நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஆசிரியர்கள் தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் மோதிரம் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it