Theme Check

தொடங்கியது தங்கப்பத்திரம் விற்பனை!!

தொடங்கியது தங்கப்பத்திரம் விற்பனை!!

தொடங்கியது தங்கப்பத்திரம் விற்பனை!!
X

மத்திர அரசின் தங்கப்பத்திர விற்பனை தொடங்கியுள்ளது.

மத்திய அரசு தங்கப் பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிட்டுள்ளது. தங்கப் பத்திர விற்பனை தபால் நிலையங்களில் நேற்று தொடங்கிய நிலையில், வரும் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,109.

சென்னை மத்தியக் கோட்டத்தில் உள்ள தி.நகர் தலைமை தபால் நிலையம், மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் உட்பட 22 துணை தபால் நிலையங்களிலும் தங்கப் பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.

தங்கம் பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும். தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பு. ஒருவர் ஒரு நிதியாண்டுக்கு அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம்.

gold

5 ஆண்டுகள் முடிந்த உடன் முதலீட்டை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான பணம் கிடைக்கும்.

இதற்கு விண்ணப்பிக்க பான் கார்டு கட்டாயம். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் நிலையத்தில் கொடுத்து தங்கப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம்.

newstm.in

Next Story
Share it