Theme Check

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் என்ன விலை தெரியுமா..?

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் என்ன விலை தெரியுமா..?

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் என்ன விலை தெரியுமா..?
X

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழலால் உலகம் முழுவதும் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கள் முதலீடுகளை தங்கத்தில் மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்றும் (4-ம் தேதி) தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 144 ரூபாய் உயர்ந்து, 38,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் 64 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Next Story
Share it