இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை... ஒரே நாளில் ரூ.840 உயர்வு..!!
இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை... ஒரே நாளில் ரூ.840 உயர்வு..!!

தங்கத்தின் விலை இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தொடர்ந்து விலையேற்றம் காணப்படுகிறது. ஆனால் இன்று ராக்கெட் வேகத்தில் விலை உயர்ந்துள்ளதால் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தவர்கள் நகையினை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு விடுமோ என்று அச்சமும் அடைந்துள்ளனர்.
தங்கத்தில் போடும் பணம் வீணாகாது என்று ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. இப்படியான தங்க விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த ஒரு வாரமாகவே தங்க விலை உயர்வில் தான் இருந்து வந்தது .
இன்றைய விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்...

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,720-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து, ரூ.4,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 66,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் உயர்ந்து ரூ.67,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

