#BREAKING:- உயர்ந்தது தங்கம் விலை..ஒரே நாளில் 400 ரூபாய் உயர்வு..!! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!
#BREAKING:- உயர்ந்தது தங்கம் விலை..ஒரே நாளில் 400 ரூபாய் உயர்வு..!! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 38,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது.
நேற்று (2-ம் தேதி), சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக இன்று (3-ம் தேதி) சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 38,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில், வெள்ளி கிராமுக்கு 1.50 காசுகள் அதிகரித்து, ரூ.68.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,500 அதிகரித்து, கிலோ ரூ.68,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

