Theme Check

குட் நியூஸ்.. நாளையுடன் விடை பெறுகிறது ‘அக்னி’..!

குட் நியூஸ்.. நாளையுடன் விடை பெறுகிறது ‘அக்னி’..!

குட் நியூஸ்.. நாளையுடன் விடை பெறுகிறது ‘அக்னி’..!
X

தமிழகத்தில், கோடையின் முக்கிய வெயில் காலமான அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி துவங்கியது. அப்போது, சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மிதமான வெப்பநிலை பதிவானது. அதேநேரம், மத்திய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெயில் தீவிரம் காட்டியது.

இதன்பின், தென்மேற்கு பருவமழை காலம் அந்தமானில் துவங்கியதால், தென் மாவட்டங்களில் வெப்பம் குறைந்து பருவ காற்று வீசியதால், வெப்பத்தின் அளவு சற்று தணிந்தது. அதேநேரம் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில் வெயில் உக்கிரம் காட்டத் தொடங்கியது.

1

சென்னையில் நேற்று (26-ம் தேதி) நான்காம் நாளாக 100 டிகிரி பாரன்ஹீட் அளவான, 38 டிகிரி செல்ஷியசை தாண்டி வெப்பநிலை பதிவானது. நேற்று, மாநிலத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

கடலூரில் 40; சென்னை மீனம்பாக்கம், திருச்சி, வேலூரில் 39; சென்னை நுங்கம்பாக்கம், மதுரை, பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர், திருத்தணி மற்றும் புதுச்சேரியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

1

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி துவங்கிய அக்னி நட்சத்திர வெயில் காலம் நாளையுடன் (28-ம் தேதி) முடிவடைகிறது. இதனால், வெயிலின் அளவு குறையும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Next Story
Share it