Theme Check

குட் நியூஸ்.. இவர்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி.. அமைச்சர் நேரு தகவல்..!

குட் நியூஸ்.. இவர்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி.. அமைச்சர் நேரு தகவல்..!

குட் நியூஸ்.. இவர்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி.. அமைச்சர் நேரு தகவல்..!
X

“தமிழகத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்து இன்னும் ஓரிரு நாட்களில் அரசு அறிவிப்பு வெளியிடும்” என்று, அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி பல்நோக்கு சமூக பணி மையம், சுரபி மகளிர் மேம்பாட்டு இயக்கம் சார்பில் மகளிர் தின விழா, மஞ்சப்பை விழிப்புணர்வு விழா, மரக்கன்று வழங்கும் விழா, பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் சேம நல நிதி வழங்கும் விழா ஆர்.சி பள்ளியில் நேற்று நடைபெற்றது.
women self help group loan: மகளிர் சுயஉதவி குழு கடன்கள் தள்ளுபடி... அமைச்சர்  சொன்ன ஹேப்பி நியூஸ்! - minister k n nehru and mayor anbalagan participated  in women day celebration at trichy ...
இதில், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “மகளிர் சுயஉதவிக் குழுவை முன்னாள் முதல்வர் கலைஞர் துவக்கி வைத்தார்.

தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அதை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். இன்னும் இரண்டு நாட்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாங்கிய கடனை அரசே ஏற்று தள்ளுபடி செய்ய இருக்கிறது.

மேலும், கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது” என அவர் தெரிவித்தார். இந்த செய்தி, பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it