Theme Check

குட் நியூஸ்.. இவர்களின் ஓய்வூதிய வயது 40 ஆக குறைப்பு.. தமிழக அரசு அதிரடி..!

குட் நியூஸ்.. இவர்களின் ஓய்வூதிய வயது 40 ஆக குறைப்பு.. தமிழக அரசு அதிரடி..!

குட் நியூஸ்.. இவர்களின் ஓய்வூதிய வயது 40 ஆக குறைப்பு.. தமிழக அரசு அதிரடி..!
X

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற 2022 - 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, “மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான வயது 50-ல் இருந்து 40 ஆக குறைக்கப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 50-ல் இருந்து 40-ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, மௌலவி, பேஷ் இமாம், மோதினார் உள்ளிட்ட உலமாக்களுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது உலமாக்களுக்கு மாதம் 3000 ரூபாய் உலமா ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 50-ல் இருந்து 40-ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Breaking:இவர்களின் ஓய்வூதிய வயது 40 ஆக குறைப்பு – தமிழக அரசு அறிவிப்பு! |  Dinasuvadu Tamil

Next Story
Share it