Theme Check

குட் நியூஸ்.. குறைந்த விலையில் தக்காளி.. அமைச்சர் அறிவிப்பு..!

குட் நியூஸ்.. குறைந்த விலையில் தக்காளி.. அமைச்சர் அறிவிப்பு..!

குட் நியூஸ்.. குறைந்த விலையில் தக்காளி.. அமைச்சர் அறிவிப்பு..!
X

வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இந்நிலையில், தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவுத்துறையின் 65 பண்ணை பசுமை கடைகளில் இன்று முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும்.

மேலும், வெளிச்சந்தையில் தக்காளி விலை கட்டுக்குள் வரும் வரை பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story
Share it